பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

 
teachers

ஜனவரியில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பினை  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

teachers

2222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  குறிப்பாக தமிழ் - 394, ஆங்கிலம் - 252, கணிதம் - 233, மற்றும் இயற்பியல் - 292 என மொத்தம் 2,222 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் நவம்பர் 30-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

teachers

www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெற 45 மதிப்பெண்களும், பொது பிரிவை சேர்ந்த பட்டதாரிகள் தேர்ச்சி பெற 60 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.