2024 ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிப்பு

 
assembly

2024 ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Tips to Get Off The “Holiday Mode”


அதன்படி ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம் உழர் திருநாள், தைப்பூசம், குடியரசு தினம் என ஜனவரி மாதம் 6 நாட்களும், மார்ச் மாதம் புனித வெள்ளியை முன்னிட்டு ஒரு நாளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரம் மாதத்தில் வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி என 4 நாட்களும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினமும், ஜூன் மாதம் பக்ரீத் தினமும், ஜூலை மாதம் மொகரம் பண்டிக்கையும் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், கிருஷ்ணஜெயந்தி என 2 நாட்களும், செப்ரம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி, மிலாதுநபி என 2 நாட்களும், அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளியை முன்னிட்டு 4 நாட்களும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் கிரிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்: திங்கட்கிழமை - 6 செவ்வாய்கிழமை - 2 புதன்கிழமை - 5 வியாழக்கிழமை - 4 வெள்ளிக்கிழமை - 3 சனிக்கிழமை - 2 ஞாயிற்றுக்கிழமை - 2 ஆகும்.