#BREAKING பொறியியல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!

 
engineering counselling 2022

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

anna

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு  உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023- 24 ஆம் கல்வியாண்டில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேர இன்று  முதல்  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க அடுத்த மாதம் 4-ந்தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ரேண்டம் எண் ஜூன் ஏழாம் தேதியும் , தரவரிசை பட்டியல் ஜூலை 12ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.