தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு

 
mkstalin

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tamil Nadu Assembly Session to Start from August 24

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக்‌ கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும்‌ தமிழுக்கும்‌, தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத்‌ தொண்டாற்றிடும்‌ தமிழ்த்தாயின்‌ திருத்தொண்டர்களுக்குத்‌ தமிழால்‌ விளங்கிடும்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும்‌ சிறப்புக்களையும்‌ அளித்து, அவர்தம்‌ தமிழ்த்தொண்டுக்குப்‌ பெருமை சேர்த்து வருகிறது. அதன்படி

◾️ திருவள்ளுவர் விருது - தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி

◾️ பேரறிஞர் அண்ணா விருது - பத்தமடை பரமசிவம்

◾️ பெருந்தலைவர் காமராசர் விருது - உ.பலராமன்

◾️ மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பழநிபாரதி

◾️ பாவேந்தர் பாரதிதாசன் விருது - எழுச்சிக் கவிஞர் முத்தரசு

◾️ தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - ஜெயசீல ஸ்டீபன்

◾️ முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - முனைவர் இரா.கருணாநிதி

ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.