வேதாரண்யத்தை நெருங்கியது புயல் மையம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு 330 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு தெற்கு 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. காரைக்காலில் இருந்து தெற்கு- தென் கிழக்கு திசையில் 120 கிலோமீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரியில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் டிட்வா புயல் கரையை கடக்க வாய்ப்பில்லை. புயல் நாளை மாலை சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கடற்கரைக்கு 25 கி.மீ. வரை நெருங்கி வரும். பின்னர் வலுவிழக்கக் கூடும். புயலின் மையப்பகுதி கடலோரப் பகுதிகளில் நிலவும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.


