“பீகாரில் ஓட்டு போட்டவர்கள் கூட தமிழகத்தில் வாக்களிக்க வாய்ப்பு இருக்கு”- என்.ஆர்.இளங்கோ
SIR பணிகள் மூலமாக பல லட்சம் வாக்குகள் நீக்கப்படலாம் என்றும், தேர்தல் ஆணையம் மூலமாக வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய முயற்சிப்பதாகவும் திமுக எம்.பி என் ஆர் இளங்கோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக சட்டத்துறை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். SIR இருக்கும் சிக்கல்களை பொதுமக்களிடம் எடுத்து வைத்து வருவதாகவும், உச்சநீதிமன்றம் வழக்கில் தேர்தல் ஆணையம் SIR தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், BLO மற்றும் மக்களுக்கு உதவி செய்ய திமுக வழக்கறிஞர், இளைஞர் அணி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், BLA2 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தான் வாக்குச்சாவடி அலுவலர் உடன் இணைந்து செயல்பட முடியும் என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக மட்டும் தான் BLA2 பணி செய்கிறார்கள் என உண்மைக்கு மாறாக பேசுவதாகவும், ஆனால் SIR வரவேற்ற அதிமுக தற்போது மக்களின் வாக்குகளை பறிக்கும் நிலையில் இருப்பதை களத்தில் உணர்ந்து இருப்பதாக தெரிவித்தார், இதை சரிசெய்ய முடியாமல் அதிமுக நிர்வாகிகள் குழம்பி வருவதாகவும் கூறினார். அதிமுக நிர்வாகிகள் விண்ணப்ப படிவத்தை கூட திமுக BLA2 நிர்வாகிகள் தான் உதவி செய்து வருவதாக தெரிவித்த அவர், ஏன் திமுக SIR எதிர்த்தோம் என மக்கள் புரிந்து கொண்டு இருப்பதாகவும் கூறினார். ஒருதலை பட்சமாக SIR பணிகளை நிறைவேற்ற நினைக்கின்றனர் என்றும், ஆணையமே வாக்காளரின் வாக்குகளை பறிக்கும் நிலை இருக்கிறது என்றார், அதேபோல் பா.ஜ.க, அதிமுக இந்த விவகாரத்தில் திசை திருப்பி திமுக மீது விமர்சிப்பதாக கூறினார். BLO அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கவில்லை. லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம் இருக்கிறது, டிசம்பர் மாதத்தில் பட்டியலில் கணிணி மயமாக மாற்றப்படுமா என்பதில் சந்தேகம் தான் என்றார். அதேபோல் பீகாரில் ஓட்டு போட்டவர்கள் கூட தமிழகத்தில் வாக்களிக்க வாய்ப்பு இருக்கும், ஆனால் இதில் இருக்கும் சந்தேகங்கள் கூட ஆணையம் பேச மறுப்பதாக கூறினார்.


