இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி ஏ.ஆர்.ரகுமான் - சீமான் புகழாரம்

 
Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி. ஆஸ்கார் வரை வென்று உலகோர் நெஞ்சில் தமிழின் தடம் பதித்த தங்கத் தமிழன். தன் இனப்பற்றாலும், மொழிப்பற்றாலும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும சான்றாய் திகழும் சாதனை தீரன். தன் தேனிசையால் கேட்போர் இதயங்களை மெய்யுருக வைக்கும் பாட்டிசை வேந்தன். என் பெருமதிப்பிற்குரிய அருமைச் சகோதரர், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.