திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன் - சீமான் பேட்டி!

2026 தேர்தலில் தவெக Vs திமுக என்ற விஜய்யின் பேச்சை வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2026 தேர்தலில் தவெக Vs திமுக என்ற விஜய்யின் பேச்சை வரவேற்கிறேன். நான் என் எதிரியை தனித்து தான் சந்திப்பேன். கூட்டத்தில் நிற்க வீரம் தேவையில்லை, தனித்து நிற்க தான் வீரம் தேவை. கூட்டணி இல்லாமல் எப்படி என கேட்பவர்கள், கொள்கை இல்லாமல் எப்படி என கேட்பதில்லை.
எதிரியை தீர்மானித்து விட்டு களத்திற்கு வந்தவர்கள் நாங்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜயின் கருத்தை வரவேற்கிறேன். ஆனால் கூட்டணி வைத்தால்தான் எதிரியை தேர்தலில் வெல்ல முடியும் என்பது சட்டமா அல்லது ஏதேனும் மரபா? எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. இன்னும் 4 மாதத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்து விடும் என கூறினார்.