3000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்!

 
dmk dmk

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பெரியார் குறித்த சீமானின் பேச்சு பிடிக்காமல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் நாதக வேட்பாளர்களும் விலகினர். 

இந்த நிலையில், 3000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 51 பொறுப்பாளர்கள் உட்பட 3,000 மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மண்டல செயலாளர் - 1, 
மாவட்ட செயலாளர்கள் - 8, 
ஒன்றிய செயலாளர்கள் - 5, 
சார்பு அணி நிர்வாகிகள் - 9, தொகுதி செயலாளர்கள் - 6, 
முன்னாள் எம் பி வேட்பாளர்கள் - 3, 
முன்னாள் எம் எல் ஏ வேட்பாளர்கள் - 6 என 51 பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்.