சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 
புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அது என்ன புயல் கூண்டு? - எளிமையாகப் புரிந்து கொள்ளுங்கள்! - puyal koondu  sea shore cyclone signalling in tamilnadu - Samayam Tamil

 மேற்கு மத்திய வங்க கடலில் ஒடிசா விற்கு தெற்கே 620 கிமீ தொலைவிலும், மேற்கு வங்காளத்தில் இருந்து 780 கிமீ தெற்கிலும், வங்காளதேசத்தில் இருந்து 900 கிமீ தென்மேற்கிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் மீண்டும் வளைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி அடுத்த 3 நாட்களில் வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயலை எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தி உள்ளது. 

சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த துறைமுகங்களில் தற்போது ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் அரபி மற்றும் வங்கக்கடல் பகுதியில் இருந்து கரை திரும்ப வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் தற்போது வங்க கடலில் புயல் உருவாக்கக்கூடிய சூழல் இருப்பதை குறிக்கும் விதமாகவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாகவும் தற்போது தமிழக மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இந்த ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஆழ் கடலில் இருந்து உடனடியாக தரை திரும்பவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.