நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற, சத்துகள் செறிவூட்டப்பட்ட நெல் ரகங்கள் உருவாக்கப்படும்!

 
tn

2024-25 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 -25ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை 1 மணி நேரம் 57 நிமிடங்கள் வாசித்தார் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

tn

  • பனை சாகுபடியை ஊக்குவிக்க 10 லட்சம் பனை விதைகள் தோட்டக்கலை துறையின் மூலம் நடப்படும்
  • 200 பனை தொழிலாளர்களுக்கு மதிப்புக்கூட்டு பொருள்களின் பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும் உரிய கருவிகளும் வழங்குவதற்கு ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு
  • பயிர்க் கடன் வட்டி மானியமாக ரூ.700 கோடி 
  • நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற, சத்துகள் செறிவூட்டப்பட்ட நெல் ரகங்கள் உருவாக்கப்படும்

tn

  • பேரிட்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ₹12,000 மானியம் வழங்கப்படும்!
  • ரூ.16,500 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற, சத்துகள் செறிவூட்டப்பட்ட நெல் ரகங்கள் உருவாக்கப்படும்
  • எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட 745 கோடி நிதி ஒதுக்கீடு!| 12,500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும்
  • ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு முதலீட்டு கடனுக்கான, வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
  • கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு; பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு

tn

  • பசுந்தீவன ஊடுபயிர் செய்து, பால் உற்பத்தியை உயர்த்த 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 கோடி மானியம்
  • மீன் வளர்ப்போரின் வருவாயை உயர்த்துவதுடன், உள்நாட்டு மீன் உற்பத்தியும் அதிகரித்திட புதிதாக நன்னீர் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பதற்கு, இடுபொருள் மானியம் மீன் தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்
  • சூரியகாந்தி பயிர் விரிவாக்கத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு
  • வேளாண் உற்பத்தி தரமான விதைகளை பயன்படுத்தினால் 15% மகசூலை அதிகரிக்கலாம்
  • மொத்தம் 15, 810 விதை வகைகளை 50 முதல் 60% தள்ளுபடியில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு
  • துத்தநாகம் ஜிப்சம் வாங்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு