இயற்கை விநாயகர் கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்!!

 
tn

அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி கட்சியின்  இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.  இது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அதிமுக பொது குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

tn

இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்த நிலையில் நேற்று வழக்கின்  தீர்ப்பை அளித்தார். அதில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும்,  ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நடைமுறையை தொடரும் என்றும் அவர் உத்தரவிட்டார்.  இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாது.  அதேசமயம்  ஓ. பன்னீர் செல்வத்தின் செல்வாக்கு தற்போது கட்சியில் மீண்டும் ஓங்கியுள்ளது.  

rn

இதன் காரணமாக நேற்று அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய நிலையில் , சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓபிஎஸ் சென்றார்.  அங்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கட்சியில் ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் அனைவரின் பொறுப்பும் தொடரும் என்றும் கொள்கைக்கு உட்பட்டு வருவோர் அனைவரையும் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

tn

இந்நிலையில் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள இயற்கை விநாயகர் கோயிலுக்கும்,  ஆழ்வார்பேட்டையில் உள்ள அனுமன் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.  அதிமுக பொதுக்குழு தீர்ப்பு சாதகமாகியுள்ள நிலையில் அவர் இன்று தேனி மாவட்டத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.