மிலாது நபி - ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் வாழ்த்து!

 
ops ops

மிலாது நபியை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் இன்று மிலாது நபி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் பலரும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இறைத் தூதரின் போதனைகளை பின்பற்றி அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை தழைத்தோங்க பாடுபடுவோம் என இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். உலகம் தழைக்க வந்த உத்தமராம் இறைத் தூதர் அவர்களின் பிறந்த நாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மீலாதுன் நபி வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

vijayakanth

இதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.