கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடியவர் படுகொலை - ஓபிஎஸ் கண்டனம்!
கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடிய திரு. ஜெபகர் அலி படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம்-ஒழுங்கை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இனிமேலாவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, கனிம வளக் கொள்ளையை முற்றிலும் ஒழித்துக் கட்டவும், மேற்படி கொலைக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை விரைந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதற்குரிய தண்டனையைப் பெற்றுத் தரவும்,
கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த திரு. ஜெபகர் அலி அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


