வெற்றி துரைசாமி விபத்தில் உயிரிழப்பு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் திரு. சைதை ளு. துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் திரு. சைதை ளு. துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து…
— O Panneerselvam (@OfficeOfOPS) February 12, 2024
மகனை இழந்து தவிக்கும் அன்புச் சகோதரர் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.