மக்களை சந்தித்து நீதி கேட்போம்...ரகசியங்களை வெளிப்படுத்துவோம் - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

 
ops

இந்த கட்சி பன்னீர்செல்வம் தாத்தாவோ, எடப்பாடி பழனிசாமி தாத்தாவோ தொடங்கியது இல்லை. மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழு  வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல் அதிமுகவி இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

Ops

இந்நிலையில், தீர்ப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்படவில்லை. மக்கள் மன்றத்தில் நாங்கள் நீதி கேட்போம். கூவத்தூரில் என்ன நடந்ததோ, அதுபோல இப்போது நடக்கிறது.  இந்த கட்சி பன்னீர் செல்வம் தாத்தாவோ, பழனிசாமி தாத்தாவோ தொடங்கியது இல்லை. மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம்; தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ, அங்கு சென்று பெறுவோம். ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர் ஆணவத்தை அதிமுக தொண்டர்கள் அடக்குவார்கள்.  மக்களை சந்திக்கும்போது பல ரகசியங்களை வெளிப்படுத்துவோம். இவ்வாறு கூறினார்.