கக்கன் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணி என்றென்றும் போற்றத்தக்கது - ஓ.பன்னீர்செல்வம்

 
ops

கக்கன் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது  வீர வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.  

மதுரை மாவட்டம் மேலூர் மாவட்டம் தும்பை பட்டி கிராமத்தில் 1907ம் ஆண்டு ஜூன் 18ல் பூசாரி கக்கன் - குப்பி தம்பதியின் மகனாக பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கக்கன், சிறுவயது முதலே பல தடைகளை எதிர்கொண்டு உயர்ந்தவர்.  பின்னாளில் அவர் அமைச்சராக இருந்த போதும் நேர்மையையும், எளிமையையும் கக்கன் ஒரு போதும் கைவிட்டதில்லை. தான் சுதந்திர இந்தியாவின் காவல்துறை அமைச்சராக இருந்த போது தன் சொந்த தம்பிக்கு நேர் வழியில் கிடைத்த காவலர் பதவியில் சேர கூட முட்டுக்கட்டை போட்டார் கக்கன். அந்த அளவிற்கு வாழ்நாள் முழுவதும் நேர்மையை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தவராக இன்றளவும் போற்றப்படுபவர். இன்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், கக்கன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வீர வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்து கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வ்வம் தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சென்னை மாநிலத்தின் உள் துறை அமைச்சராக பதவி வகித்தவருமான  கக்கன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய நேர்மையும், 
எளிமையும், தமிழ்நாட்டிற்கு அவர் ஆற்றிய பணியும் என்றென்றும் போற்றத்தக்கது.