அக்., 3ஆம் தேதியும் மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!!

 
minister ma subramanian

தமிழகத்தில் கடந்த 12-ந்தேதி  28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளும், கடந்த 19-ந்தேதி 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல்  3-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 26ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில்  24 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது.

vaccine

இதையடுத்து தமிழகத்திற்கு கூடுதல் 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என்று கோரி முதல்வர் ஸ்டாலின் பி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அத்துடன் எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில்  சந்தித்து கொரோனா தடுப்பூசியின் தேவை குறித்து வலியுறுத்தினார். இதை தொடர்ந்து தமிழகத்துக்கு 28 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 

ma subramanian

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அக்டோபர் 3ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். 24.98 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதால் 20 ஆயிரம் மையங்களில் முகாம் நடத்தப்படுகிறது.அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை பணிபுரிய உள்ளதால் திங்கட்கிழமை தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" என்றார்.