அக்டோபர் 14,15,16 தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்

 
rain

நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain


வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கடந்த ஆண்டு அக். 21ல் பருவமழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது என்றும் 
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும், வடதமிழக கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே அக்டோபர் 14,15,16 தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சை, புதுக்கோட்டை,திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் தர்மபுரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் 16 ஆம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.  20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.