"பர்ஸை திறந்து காட்டிய ஓபிஎஸ்" - அதிரடியாக சோதனை செய்த அதிகாரிகள்

 
tn

ஓபிஎஸ் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.  அதிமுக தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக கூறி வரும் ஓபிஎஸ் அதை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.  அதேசமயம் ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல வியூகங்களை வகுத்திருப்பதாக கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

 ops

ராமநாதபுரம் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தை தோற்கடிப்பதற்காக பழனிசாமி ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளார்.  ஏற்கனவே பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடும் நிலையில் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறாமல் இருக்க நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.  இது ஒருபுறம் இருக்க பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் அவரது காரை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டு அவரை திக்குமுக்காட  செய்து வருகின்றனர். 

op

அந்த வகையில் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் ஓ பன்னீர்செல்வத்தின் வாகனம் மற்றும் பரப்புரை வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அவரது காரில் வைத்திருந்த பர்ஸை திறந்து காட்ட கூறி அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ஓபிஎஸ் வாகனம் அங்கிருந்து அனுப்பி