பயத்தை ஏற்படுத்த கூலித் தொழிலாளி படுகொலை - 6 பேர் கைது!!

 
tn

ஊருக்குள் பயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக நடுப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேகரியாம்பட்டியை சேர்ந்த சக்திவேல் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுனராக இருந்துள்ளார்.  கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த வேலு இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.  இவர்கள் அரசு கட்டிட காண்ட்ராக்டர் கிருஷ்ணனிடம் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.  கடந்த 6ம் தேதி நடுப்பட்டியில் நடைபெற்று வரும் சாக்கடை கட்டிட பணியின் காரணமாக டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்போது அப் பகுதி பெண்கள் லாரியில் தண்ணீர் பிடித்துள்ளனர். கரியாபட்டியை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுனர் சக்திவேல் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் மொபைல் எண் கேட்டதாக தெரிகிறது மொபைல் நம்பர் கேட்டதாக தெரிகிறது . இது குறித்து அந்தப் பெண் தனது உறவினர் விஜயிடம் கூறியுள்ளார் . அங்கு வந்த விஜய் தனது உறவினர் வேலுவை பார்த்து கரியாம்பட்டி சேர்ந்த டேங்க் லாரி ஓட்டுனர் சக்திவேல் நமது ஊர் பெண்ணிடம் போன் நம்பர் கேட்டுள்ளார் .அதற்கு நீங்கள் ஏன் சத்தம் போடவில்லை என்று கேட்டுள்ளார் .சக்திவேலும் நடுப்பட்டியை சேர்ந்த வேலுவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் இது குறித்து உரிமையாளர் கிருஷ்ணனிடம் கூறியதாக கூறப்படுகிறது. உடனடியாக உரிமையாளர் கிருஷ்ணன் கரியாம்பட்டியை சேர்ந்த சக்திவேலுவை கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது.

tn

 இதனால் ஆத்திரமடைந்த கரியாம்பட்டியை சேர்ந்த சக்திவேல் நேற்று மாலை நடுப்பட்டியை சேர்ந்த வேலுவிடம் பேசி மது குடிக்க காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து  தாக்கியதாக கூறப்படுகிறது.  அதிலிருந்து தப்பித்த வேலு நடந்த சம்பவத்தை ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார் . இதில் இரு தரப்பினருக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது.  கரியாம்பட்டி சக்திவேல் தரப்பினரால் தாக்கப்பட்ட நடுப்பட்டியைச் சேர்ந்த அழகு பாண்டி என்பவரின் தலையில் இரும்பு கரும்பியால் அடிபட்டு அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அழகு பாண்டியை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அழகு பாண்டியின் தலையில் பலத்த காயமிருந்ததால் அவர்  மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

murder

இந்த சூழலில் நடுப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆண்டார் என்ற 55 வயது முதியவர் தனது வீட்டு வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் கூலி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  இது தொடர்பாக நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடினர்.

arrest
இதுதொடர்பாக ரமேஷ் குமார்,  கார்த்திக், விக்னேஸ்வர் , சக்திவேல், ஜோகநாதன் , மருதை ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தையின்போது யாரும் எதிர்த்து பேசக்கூடாது, தங்கள் மேல் பயம் வர வேண்டும் என்பதற்காக கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஏற்கனவே வீட்டின் முன் ஜல்லி கற்கள் கொட்டுவது தொடர்பாக இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.