"ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாகாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!!

 
tn

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மொத்தம் ரூபாய் 12.66 கோடி மதிப்பிலான ரூ.8.72 கோடி மதிப்புடைய நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ எந்திரம் மற்றும் ரூ 3.94 கோடி மதிப்பிலான குடல், இரைப்பை உள்நோக்கி கருவி திறந்து வைக்கப்பட்டது.  

fb

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ஓமந்தூரார் மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாற்றப்படாது.  மருத்துவ தேவை அதிகரித்து வரும் நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். 

முன்னதாக சென்னை சென்ட்ரல் அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும்,  அரசு மருத்துவக் கல்லூரியும் இயங்கி வருகிறது.  ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புடன் இயங்கி வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர சிகிச்சையை இங்கு பெற்று வருகின்றனர். இந்த சூழலில் ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அதற்கு பதிலாக அரசினர் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகம் கொண்டுவரப்படும் என்றும்,  கடந்த சில தினங்களாக செய்திகள் உலா வந்தன.  இந்த சூழலில் அமைச்சரின் விளக்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.