ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கை : பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு..

 
மாணவர்கள்

உருமாறிய புதியவகை ஓமைக்ரான் கொரோனா தொற்று 29 நாடுகளுக்கு பரவி விட்டது. இந்தியாவில், வெளிநாடுகளிலிருந்து கார்நாகடகா வந்த இருவருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற கொரோனா வைரஸ்களைவிட ஓமைக்ரான் 5 வேகமாக பரவும் என கூறப்பட்டுள்ளதால், மக்களிடையே பீதி நிலவுகிறது.

ஒமைக்ரான் கொரோனா

ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தமிழக பள்ளிகளில் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள்

  • பள்ளிகளில் ஓமைக்ரான் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  • 1 முதல் 8ஆம் வகுப்பு  வரை சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • பள்ளிகள், விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களை மூட வேண்டும்
  • இறைவணக்க கூட்டம், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
  • நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது
  • குறிப்பாக, ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.