நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.5,900 கட்டணம்! ஆம்னி பேருந்துகளில் கொள்ளை

 
omni bus omni bus

நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல ஆம்னி தனியார் பேருந்துகளில் மூன்று  மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

omni bus

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்திற்கு சென்னை, பெங்களூர் கோவை போன்ற பெரு நகரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே ஏராளமான பொதுமக்கள் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

விடுமுறை முடிந்து பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் வடசேரி ஆம்னி பேருந்து  நிலையத்தில் இருந்து சென்னை பெங்களூர் போன்ற வெளியூர்களுக்குசெல்ல  குறிப்பாக  சென்னைக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில்  இன்று கட்டணம் தாறுமாறாக உயர்ந்திருந்தது. நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்து  ஒன்றில் இன்று பயணம் செய்வதற்கு ரூ.2500 முதல் 5900 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சிலர் கட்டண உயர்வையும் பொருட்படுத்தாமல் பேருந்துகளில்  பயணம் செய்தனர். தனியார் பேருந்துகளில் முறையாக கட்டணம் வரையறுக்கப்படாமல் கடுமையாக உயர்த்து உள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.