டிச.8-ம் தேதி தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம்..!
Dec 7, 2025, 05:00 IST1765063822000
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்"
08-12-2025 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்ச் செயலாளர்கள் -சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்டக் கழக செயலாளர்கள் ஓரிடத்தில் அமர வைத்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


