கட்சியில் சேர்ந்தவுடன் முக்கிய பொறுப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா..!!

 
கட்சியில் சேர்ந்தவுடன் முக்கிய பொறுப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா..!! கட்சியில் சேர்ந்தவுடன் முக்கிய பொறுப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா..!!

திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட   அன்வர் ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 


அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம் பியுமான அன்வர் ராஜா, ஆரம்பத்தில் இருந்தே அதிமுக - பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருந்து வருகிறார்.  ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்த போதும் அக்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த அன்வர்  ராஜா,  சிஏ ஏ சட்ட திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோதும், நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசி இருந்தார். இந்த நிலையில்,  அண்மையில்  அன்வர் ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்தவுடன் முக்கிய பொறுப்பு.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அன்வர் ராஜா..!!

இந்நிலையில் அவருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புலவர் இந்திரகுமாரி வகித்துவந்த திமுக இலக்கிய அணி தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப்படுவதாக நேற்று, திமுக தலைமை கழகம் வெளியிட்டிருந்தது.  இந்நிலையில் திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட   அன்வர் ராஜா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.