வாரத்துக்கு ஒரு விபத்து.. ஆய்வு மட்டும் செய்றீங்க..! தீர்வு என்ன? - சு.வெங்கடேசன் கேள்வி..

 
வாரத்துக்கு ஒரு விபத்து.. ஆய்வு மட்டும் செய்றீங்க..! தீர்வு என்ன? - சு.வெங்கடேசன் கேள்வி.. வாரத்துக்கு ஒரு விபத்து.. ஆய்வு மட்டும் செய்றீங்க..! தீர்வு என்ன? - சு.வெங்கடேசன் கேள்வி..

 இந்தியாவில் 6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு விபத்தின் போதும் ஆய்வு மட்டுமே நடைபெறுவதாகவும் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி ரயில் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.  கடந்த ஆண்டு ஒடிசா பாலசோர் இரயில் விபத்தில் 293 பேர் மரணமடைந்து ஆயிரக்கணக் கானவர்கள் படுகாயமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.  ஒவ்வொரு முறை ரயில் விபத்து ஏற்படும் போது அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு மேற்கொள்கிறது. ஆனாலும் ரயில் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில்  நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  மைசூரு- தர்பங்கா பாகமதி விரைவு ரயில் இரவு 8.30 மணியளவில் பொன்னேரியை கடந்து கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே  வந்தபோது  மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக, லூப் லைனுக்குள் நுழைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரயில் வேகமாக மோதியதால் ரயில் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த ரயில் விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டன.   நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை; 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

su venkatesan

இவ்வாறு அடிக்கடி நிகழும் ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் என  அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தவகையில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே . ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது? ”என்று குறிப்பிட்டுள்ளார்.