தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு - ஐ.சி.எம்.ஆர். அதிர்ச்சி தகவல்

 
Diabetes

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக ஐ.சி.எம்.ஆர். அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொதுவாக இன்று உலகையே அச்சுறுத்தி வரும் நோய்களில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். இந்த நோயால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா .அதுவும் நம் தமிழகத்தில் அதிகம் பேரை இந்த நோய் பாதிக்கின்றது.  பொதுவாக கணையத்தில் இன்சுலின் சுரக்காத நிலையையே சர்க்கரை நோய் என்கிறோம்,
இந்த சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டால் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரையுடன் அவஸ்த்தை பட வேண்டும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் இந்த நோயில் இருந்த நம்மை பாதுகாத்து நீண்ட ஆயுள் பெறலாம். இந்த நிலையில், இந்தியாவில் சர்க்கரை நோய் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வு ஒன்று மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ICMR

ஐசிஎம்ஆர் சமீபத்தில் நாடு முழுவதும் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் இந்தியாவில் 10 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் சுமார் 80 லட்சம் பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் ஐசிஎம்ஆர்  ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.