கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை
தூய்மை காவலவர்களுக்கு வார விடுப்பு வழங்கலாம் என்று ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தூய்மை காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம ஊராட்சிகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தூய்மை காவலவர்களுக்கு வார விடுப்பு வழங்கலாம் என்று ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். அதன்படி, சுழற்சி முறையில் தூய்மை காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்கலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். வார விடுமுறை தவிர்த்து விடுப்பு எடுத்த ஒரு நாள் ஊதியமாக 160 பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்த உள்ளார்.


