ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலைக்கு உதவியதாக ஒருவர் கைது!

 
ச் ச்

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை டவுண்  ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). இவர் தமிழ்நாடு காவல்துறையில்  பணியாற்றி கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். தற்போது அவர் நெல்லை டவுண் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுண்  தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையில் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், ஜாகீர் உசேன் பிஜிலி அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வைத்து கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து  கொலை செய்தனர்.

இந்நிலயில் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் இதுவரை 2 பேர் சரணடைந்துள்ளனர். மேலும் இக்கொலை வழக்கில் ஏற்கனவே அக்பர்ஷா என்பவர் சரணடைந்த நிலையில், அவரது சகோதரர் பீர் முகமது கைது செய்யப்பட்டார். கொலைக்கு உதவியாக இருந்ததாக பீர் முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.