ஈபிஎஸ் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்து தொண்டர் பலி
Nov 30, 2025, 19:38 IST1764511683651
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் கொண்டையம் பாளையத்தை சேர்ந்த அர்ஜுன் என்ற தொண்டர் மயங்கி விழுந்து உயிரிழபந்தார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூட்டத்தின் இடையே நின்று கொண்டிருந்தபோது, அர்ஜுனன் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.


