மு.க.ஸ்டாலின், உதயநிதி தொகுதிகளில் இருந்த மூன்றில் ஒரு வாக்காளர்கள் நீக்கம்
தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது சொந்த தொகுதிகளில் இருந்து மூன்றில் ஒரு வாக்காளர் வீதம் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் 1.03 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியான எடப்பாடி தொகுதியில் 26,375 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். S.I.R-க்கு பின் முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 பேரும், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 6,19,777 வாக்காளர்களும், காட்பாடி தொகுதியில் 35,666 வாக்காளர்களும், கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்களர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 1,50,828 வாக்காளர்களும், ராமநாதபுரத்தில் 1,17,364 வாக்காளர்களும், ஈரோட்டில் 3,25,429 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.


