ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி!
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 4 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி கீழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கை எதிருத்து ஜவாஹிருல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, ஜி.எம்.ஷேக், நல்ல முகமத் கலஞ்சிமுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.


