ஆன்லைன் முறையில் வருகையில்லா பத்திரப்பதிவு திட்டம் இன்று முதல் அமல்

 
கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.23,380 பறிமுதல்

தமிழக மாநிலம் முழுவதும், ஆன்லைன் முறையில் வருகையில்லா பத்திரப்பதிவு திட்டம் இன்று  நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கேற்ப சர்வர் திறன் அதிகரிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.


தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே முதல் முறையான பத்திர பதிவு செய்யும் நடைமுறைக்கு உரிய அறிவுரை வழங்கி பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன்உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் ஒரு நாளைக்குள் பத்திரம் செய்து தர வேண்டும். இல்லையெனில் உரிய காரணங்களுடன் ஆவணங்களை திருப்பித் தர வேண்டும். திருப்பி தரப்படும் ஆவணங்களை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர்கள்  டிஜிட்டல் கையெழுத்து பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களால் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் அவர்களது கையெழுத்து இருக்கிறதா என்பதை சார் பதிவாளர்கள் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும்  வில்லங்கச் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சார் பதிவாளர் கட்டாயம் பார்க்க வேண்டும். ஆவணதாரர்களின் புகைப்படம் நீல நிறத் திரையில் தெளிவாகத் தெரிகிறதா என்பதை சார்பதிவாளர்கள் பார்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கும் சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை  ஐஜி வழங்கி உத்திரவிட்டார்