“வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பு”- பாஜக திட்டவட்டம்
பாஜக வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என RSS தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.

சென்னையில் RSS அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்தலைவர்கள் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், பாஜக உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நடந்த RSS - பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை பொறுப்பில் இருந்து விடுவித்து RSS பணிக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. தேர்தல் வரை அமைப்புச் செயலாளர் பொறுப்பை கூட்டுத் தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுளது. பாஜக வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என RSS தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, அந்தக் கட்சியை விட RSSக்கு முக்கியமானது என அதன் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.


