நாளை முதல் உதகை மலர் கண்காட்சி- முதல்வர் தொடங்கிவைக்கிறார்
உதகையில் தற்போது கோடை சீசன் கலைக்கட்டி உள்ளது. இதனால் குளு குளு காலநிலை நிலவில் வருகிறது. அதனை அனுபவித்தவாறு இங்குள்ள சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக உள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தலங்களை மட்டும் பார்த்து ரசிப்பதுடன் பல்வேறு கண்காட்சிகளையும் கண்டு மகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடை விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக காய்கறி கண்காட்சியும் அதனைத் தொடர்ந்து வாசனை திரவியம் மற்றும் ரோஜா கண்காட்சியும் நடைபெற்ற முடிந்த நிலையில் கோடை சீசனின் பிரதான நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நாளை தொடங்குகிறது. இந்த மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். மலர் கண்கட்சியின் சிறப்பு அம்சமாக 7.5 லட்சம் மலர்களைக் கொண்டு பூங்காவின் நுழைவு பகுதி முதல் பல்வேறு இடங்களில் 24 மலர் சிற்பங்கள் வடிவமைக்கபட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மலர் கண்காட்சியின் முகப்பு பகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் மலர்களைக் கொண்டு 35 அடி அகலம் 12 அடி உயரத்திற்கு அரண்மனை நுழைவாயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 127 வது மலர் காட்சி என்பதை குறிப்பிடும் வகையில் 16 ஆயிரம் மலர்களைக் கொண்டு வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியின் பிரதான மலர் அலங்காரமாக 2 லட்சம் கொய் மலர்களைக் கொண்டு 80 அடி நிளம் 25 அடி உயரத்தில் ராஜராஜ சோஜன் அரண்மனையின் முகப்பு பகுதியை போல சத்ருபமாக அலங்காரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அரண்மனையின் ஒரு பகுதியில் யானை ஒன்றும் மறுப்பகுதியில் சிம்மாசனம் அதன் அருகே காவலர்கள் நிற்பது போன்ற மலர் சிற்பங்களும் இடம்பெற உள்ளது. அத்துடன் மலர் மாடங்களில் பல்வேறு வகையான 40,000 மலர் தொட்டிகள் கண்காட்சிக்காக வைக்கப்படுகிறது. கண்ணாடி மாளிகை முன் பகுதியில் உள்ள புல்வெளியில் 45 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்ட அன்னபட்சி மலர் அலங்காரம், கல்லணையிலிருந்துதண்ணீர் கொட்டுவது போல 45 ஆயிரம் மலர்களைக் கொண்டு மலர் அருவியும் அமைக்கபட்டுள்ளது.

பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் பூத்துள்ள மலர்கள் அலங்கார மேடையில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் என மொத்தம் 275 வகையான மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மலர் கண்காட்சியை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் வளர்க்கும் காட்சி 25ஆம் தேதி மாலை நிறைவடைய உள்ள நிலையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.


