உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 6 வரை ரத்து

 
train train

மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை நாளை (02-08-24) ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு பர்லியார் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஆடர்லி - ஹில்குரோ இடையே மலை ரயில் பாதையில் நிலச்சரிவு  ஏற்பட்டு தண்டவளத்தில் பாறைகள் விழுந்துள்ளதால் இன்று மேட்டுபாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கபடும் மலை ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யபட்டது.

இதனையடுத்து மலை ரயில் தண்டவாளத்தில் உள்ள பாறைகள் மற்றும் மண் குவியலை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவடையாததால் நாளையும் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான அனைத்து மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹில்குரோவ்- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டதால் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை ரத்து செய்யபட்டுள்ளது.