ஜன.7ஆம் தேதி நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை!

 
நீலகிரி நீலகிரி

படுகர் இன மக்களின் ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரியில் ஜடெய சாமி திருவிழா; பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கிய படுகர்  இன மக்கள் | badagas of the nilgiris celebrating jadayasamy festival photo  album - Vikatan


நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களின் குல தெய்வமாக ஹெத்தை அம்மனை வழிப்பட்டு வரும் நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஹெத்தை பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் வரும் ஜனவரி 7-ந்தேதி பேரகணி ஹெத்தை கோவிலில் பண்டிகை  கொண்டாடபட உள்ளது. அன்றைய தினம் காலை முதல் மாலை வரை விழா நடைபெற உள்ளதால் ஒரு லட்சத்திற்கும் மேற்ட்ட படுகர் இன மக்கள் கோவிலுக்கு வர உள்ளனர்.

அதனையடுத்து ஜனவரி 7-ந்தேதி ( புதன் கிழமை) நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடபடுவதாக மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜனவரி 24-ந்தேதி சனி கிழமை பணி நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.