15 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து!

 
train

கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை ஓராண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் ஊட்டி மலை சேவை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு தினந்தோறும் ஊட்டி முதல் குன்னூர் இடையே மூன்று முறையும் ,மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே ஒருமுறையும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து குன்னூர் செல்ல முதல் வகுப்புக்கு ரூபாய் 350 , இரண்டாம் வகுப்புக்கு ரூபாய் 150 , மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்புக்கு ரூபாய் 600 இரண்டாம் வகுப்புக்கு ரூபாய் 295 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

train

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் ரயில் பாதையில் கடந்த மாதம் மண் சரிவு ஏற்பட்டுள்ளது .இதனால் இரண்டு நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டு  அக்டோபர் 9ஆம் தேதி மீண்டும் ரயில்சேவை தொடங்கியது. மீண்டும் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி கல்லார் – அடர்லி இடையே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது. 

ttn

இந்நிலையில் பாறைகள் மலை பகுதியில் இருந்து உருண்டு விழுந்து போக்குவரத்தில் தடை ஏற்படுத்திய நிலையில் அதை சீரமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இதனால் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழை காரணமாக  ஊட்டி மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.