#BREAKING செங்கோட்டையனை தொடர்ந்து ஓபிஎஸ் எடுத்த முடிவு- டெல்லியில் முகாம்

 
op op

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

Ops

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன் வலியுறுத்தினார். இதனையடுத்து அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்ததோடு டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து அவரை நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார். அவரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் தவெகவில் இணைவார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.புது கட்சி பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அவர் சந்திக்கவுள்ளார். கேரளாவின் கொச்சினுக்கு சென்று, அங்கிருந்து ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையவில்லையென்றால் புதிய கட்சி உருவாக்கப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார்.