200 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழு நேர கடைகளும் திறக்க நடவடிக்கை!!

 
periyasamy

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கூடிய சட்டப்பேரவையில் முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அத்துடன் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  இதையடுத்து இன்று முதல் வருகிற 23-ஆம் தேதி வரை நிதிநிலை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.  இதில் நிதி , வேளாண்துறை உள்ளிட்ட அமைச்சர்கள் பதிலுரை வழங்கி வருகின்றனர்.

tn

இந்நிலையில் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு திருப்பூரில் நியாய விலை கடைகளை அதிகப்படுத்தும் திட்டம் உள்ளதா?  என்று  திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 3 முழு நேர கடைகள், 7 பகுதி நேர கடைகள் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. உறுப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரிக்க அரசு தயாராக உள்ளது .150 ரேஷன் கார்டுகளுக்கு பகுதி நேர கடைகளும் 200 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழு நேர கடைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

thangam thennarasu
கீழ்வைத்திணான்குப்பம் தொகுதியில் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளதா? - கெஜன்மூர்த்தி எம்எல்ஏ 

அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்:- தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த நிலம், சாலை வசதி, குடிநீர் வசதி, விமான போக்குவரத்து வசதி உள்ளிட்டவை தேவை - அமைச்சர் தங்கம் தென்னரசு சாத்தியக்கூறுகள் இருப்பின் எதிர்காலத்தில் தொழிற்பூங்கா அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும். 

nehru

மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? - சுதர்சனம் எம்எல்ஏ 

அமைச்சர் கே.என்.நேரு பதில் :- உடனடியாக செய்யமுடியாது ; உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்; அதன் அடிப்படையில் பணிகளை விரைந்து தொடங்க உள்ளோம்