தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 4272 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு!!

 
tn

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.453.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4272 புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4680 பயனாளிகளுக்கு ரூ.98.28 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும்  முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

tn

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.11.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.453.67 கோடி செலவில் 9 மாவட்டங்களில் 13 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4272 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். மேலும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4680 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.98.28 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும், 72 கைத்தறி நெசவாளர்களுக்கு பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 4 லட்சம் வீதம் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.

tn

இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 2037.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 19,777 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் சுமார் 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. "நம் குடியிருப்பு, நம் பொறுப்பு" திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. குடியிருப்போர் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கான பணி ஆணைகள் வழங்குதல் பல்வேறு பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாவட்டங்களில் வசிக்கும் 4680 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 இலட்சம் வீதம் 98 கோடியே 28 இலட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகள் வழங்கினார். நகர்ப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்குதல் நகர்ப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூ.4 இலட்சமாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் மாநில அரசு மானியமாக ரூ.2.50 இலட்சம் ரூபாயும், ஒன்றிய அரசு மானியமாக ரூ.1.50 இலட்சம் ரூபாயும், மொத்தம் 4 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.