ரூ.15.46 கோடி செலவில் 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.155.42 கோடி செலவில் 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.20.54 கோடி செலவில் 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், ரூ.24.39 கோடி செலவில் 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள், ரூ.15.46 கோடி செலவில் 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், மாநிலத்தின் 21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 24.39 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள் மற்றும் 15.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

tn

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள், சாலை வசதிகள், பாலங்கள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உள்ளாட்சி அமைப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில், பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருவதுடன், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற புதுமையான ஊரக வளர்ச்சி திட்டங்களையும் இவ்வரசு வகுத்து, அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வருகிறது.

tn

5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு செயலாக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்த ஊராட்சி ஒன்றியக் கட்டடங்களுக்குப் பதிலாக, நாமக்கல் மாவட்டம் - பரமத்தி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர், மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்க் கூறு நிதியிலிருந்து 15.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.