பெங்களூருவில் நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் - மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

 
patna meeting

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. 

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியயுள்ளன.  கடந்த சில நாட்களுக்கு முன்னர்(ஜூன்23ம் தேதி) பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர். அதில் பாஜகவை வீழ்த்த நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்தனர். மேலும் அடுத்த கூட்டம் ஜூலையில் நடைபெறும் என அறிவித்தனர். இதனிடையே எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை நாளை மற்றும் நாளை மறுதினம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

cm stalin


 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.