புதிய மகிளா காங்கிரஸ் தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு- சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு
தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பு தலைவராக ராம லட்சுமி நியமனத்திற்கு அவ்வமைப்பின் மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் நடைபெற்றது. இதில் நிகழ்வில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் சௌமியா ரெட்டி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமலக்ஷி ராஜன்னா மாவட்ட தலைவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அகில அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமலக்ஷி ராஜன்னா செய்தியாளர்களை சந்தித்தார், அதில் தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பு தலைவராக ராம லட்சுமி நியமனம் என்றார். அப்போது புதிய பொறுப்பு தலைவராக ராம லட்சுமி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட பெண் தலைவர்ரகள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எங்களை கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக ராம லட்சுமி நியமனம் செய்து உள்ளனர் என தெரிவித்தனர். தேசிய பெண் நிர்வாகிகளை மாவட்ட பெண் நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த ஹசீனா சையது கட்சி விரோத நடவடிக்கை காரணாமாக நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



