ஐஐடி நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு.. பெற்றோர் போராட்டம்..
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை அனுப்ப வரும் பெற்றோர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து வேளச்சேரி நுழைவு வாயில் முன்பு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஐஐடி வளாகத்திற்குள் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களை பள்ளியில் விட்டுச் செல்வதற்காகவும், பின்னர் வகுப்புகள் முடிந்து அழைத்துச் செல்வதற்காகவும் பெற்றோர்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது அவ்வாறு மாணவர்களை பிக் அப் - டிராப் செய்ய வரும் பெற்றோர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஐஐடி வளாகத்திற்கு வாகனத்துடன் வரும் பெற்றோர் 20கிமீ வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும், 6ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களை picup drop அனுமதியில்லை என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐஐடி நிர்வாகத்தின் புதிய விதிகளுக்கு பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து வேளச்சேரி நுழைவு வாயில் முன்பு, புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.