மெரினாவில் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு - மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

 
pen

மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

pen

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை அருகே 81 கோடி செலவில் பேனா சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.  இதற்கான பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறையும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கியது.  

இந்த சூழலில் ராமநாதபுரத்தை சேர்ந்த நல்லதம்பி, நாகப்பட்டினத்தை சேர்ந்த சூசை அந்தோணி, மற்றும் சென்னை சேர்ந்த தங்கம் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பேனாச்சின்னம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். பொதுநல வழக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  கடலின் நினைவுச் சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் நலம் பாதிக்கப்படும் என்றும் எனவே மத்திய அரசு வழங்கிய அனுமதி மற்றும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யக்கோரி உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

supreme court

இந்நிலையில் சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்னம்  திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுநல மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.  அத்துடன் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அல்லது ஐகோர்ட்டை அணுக மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.