நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள் வாழ்ந்து இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டும் - ஓபிஎஸ் வாழ்த்து
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் ரசிகர்கள், திரைபிரபலங்கள் மற்றும் தலைவர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், இன்று தனது 75-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், பத்மவிபூஷண், தாதா சாகெப் பால்கே விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்திற்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ்ந்து இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


