மன வளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம் - ஓபிஎஸ் கண்டனம்

 
ops ops

மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை”என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, குற்றங்களை ஆராய்ந்து, ராயந்து, எந்தவிதப் பாகுபாடுமின்றி நடுநிலைமையுடன் செயல்படக் கூடிய ஆட்சி நடைபெற்றால்தான் குற்றங்கள் குறைந்து நாட்டிலே அமைதி நிலவும், பொருளாதாரம் வளர்ச்சியடையும், தொழில்கள் பெருகும், தொழிலாளர்கள் பயனடைவர். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான ஆட்சி தமிழ்நாட்டிலே நடைபெற்று வருகிறது. அதாவது, குற்றங்களை கண்டுபிடிக்காத, கொலை, கொள்ளை வழக்குகளை தாமதப்படுத்துகின்ற, நீர்த்துப் போகச் செய்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மக்களின் பாதுகாப்புக்கு, குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த அளவுக்கு சந்தி சிரிப்பதற்குக் காரணம் காவல் துறையினரை ஆட்சியாளர்கள் சுதந்திரமாக செயல்படவிடாததுதான் என்று சொன்னால் அது மிகையாகாது.

ops

அந்த வகையில், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு 1060T வளர்ச்சி குன்றிய மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் பயிலும் அனுப்பப்பட்டதையும், தேவையற்ற அழைப்புகள் வருவதையும் புகாராக அவரது தந்தை . அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்ததாகவும், பின்னர் பருவத் தேர்வினை காரணம் காட்டி விசாரணை தேவையில்லை என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவியை ஓராண்டுக்கும் மேலாக கூட்டு பலாத்காரம் செய்ததாக தற்போது செய்திகள் வருகின்றன. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கெனவே இதுகுறித்து புகார் கொடுத்த நிலையில், மனவளர்ச்சி குன்றிய அந்த பெண்ணை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் காவல் துறைக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை விசாரணை தேவையில்லை என்று கூறினாலும், அந்த மாணவி கல்லூரி மற்றும் வீடு தவிர வேறு எங்கு செல்கிறார் என்பதை காவல் துறை கண்காணித்திருந்தால் இந்த நிலைமை அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டு இருக்காது. மன வளர்ச்சி குன்றிய பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்குதான். 

விழித்து இருக்க வேண்டிய காவல் துறை விழிபிதுங்கி இருக்கிறது. தி.மு.க. அரசு காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடாததுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி, மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் வழங்க வேண்டுமென்றும், மன வளர்ச்சி குன்றிய பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது கண்காணிக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.