பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து - மத்திய அரசுக்கு ஓபிஎஸ் நன்றி!!

 
ops

பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ததற்காக மத்திய அரசுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

OPS

தொழில் துறையின் அவசர தேவையை கருத்தில் கொண்டு பருத்தி மீதான இறக்குமதி வரி மற்றும் செஸ் வரிகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. பருத்தி மீதான இறக்குமதியை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை தொடர்ந்து தமிழக முதல்வர்,  தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோர் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.  ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை பருத்தி  மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நூற்பாலைகள் , கைத்தறிகள் விசைத்தறிகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்கள் பயனடையும் என்று சொல்லப்படுகிறது.

tn

இந்நிலையில் பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ததற்காக மத்திய அரசுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு  கடிதம் எழுதியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், "பருத்தி நூலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு 2021 டிசம்பர் 18 அன்று நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். தற்போது பருத்தி இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை இந்திய அரசு நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது சந்தையில் போதிய பருத்தி கிடைக்கச் செய்து, எதிர்காலத்தில் பருத்தி விலையை ஓரளவு குறைக்கும் என நம்புகிறேன். இது தமிழக ஜவுளித் தொழிலுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. உடனடி மற்றும் பயனுள்ள செயலுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.